நிகழ்ச்சிகள்
இந்த சமுதாயத்தை பலப்படுத்த வேண்டும்
என்பதற்காக பி.வி.எம் அறக்கட்டளையானது மக்கள் மத்தியில் பல்வேறு
விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியும், பங்கெடுத்தும் வருகின்றது. உதாரனத்திற்கு உங்கள்
பார்வைக்கு சில:
1.முகாம் நடவடிக்கைகள் :
கிராமப்புரங்களில் வாழும் குழந்தைகள் மற்றும் முதியோர்களை கருத்தில்
கொண்டு பல்வேறு மருத்துவ முகாம்களை பல கிராமங்களில் எமது அமைப்பு நடத்தி
சேவை செய்து வருகின்றது. இதன் மூலம் ஏழை மக்களுக்கு உரிய மருத்துவ வசதியும்,
அறுவை சிகிச்சைகளும் இலவசமாக கிடைப்பதற்கு உதவி வருகின்றது.
என் |
முகாம் பெயர் |
ஊர் |
பயன்
பெற்றவர்கள் |
குழந்தைகள் |
முதியோர்கள் |
1. |
கண் சிகிச்சை முகாம் |
மண்டபம் |
261 |
16 |
18 |
2. |
மருத்துவ முகாம் |
பாரதி நகர் |
450 |
36 |
10 |
3. |
கண் சிகிச்சை முகாம் |
திருப்புல்லானி |
280 |
9 |
32 |
2.நீர் மற்றும் சுகாதார
நடவடிக்கைகள் :
இராஜிவ் காந்தி குடிநீர் அறநிறுவனம் - நியுடெல்லி மற்றும் தமிழ்நாடு
குடிநீர் வடிகால் வாரியத்துடன் இணைந்து பி.வி.எம் அறக்கட்டளை கீழ்க்கண்ட
பணிகளில் ஈடுபட்டுள்ளது. (under 90% subsidy scheme)
1. கிராமப்புரங்களில் நீராதார நிலைகளை கண்டறிந்தது
2. குடிநீர் மற்றும் சுகாதார கமிட்டிகளை அமைக்கப்பட்டது..
3. குடிநீர் பிரச்சினை நிலவும் கிராமப்புறங்களை கண்டறிந்து அங்கு ஆழ்குழாய்
கிணறுகளை அமைப்பதற்கான
ஏற்பாடுகள்.
3.காச நோய் தடுப்பு நிகழ்ச்சி:
திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்பு திட்டத்தின் கீழ் பி.வி.எம்
அறக்கட்டளை பெண்கள் சுய உதவி குழுக்களை கண்டறிந்து அவர்களை பயிற்றுவித்து அவர்களை
மாவடட சுகாதாரத்துறையுடன் தன்னார்வ தொண்டர்களாக காச நோய் கட்டுப்பாட்டு
திட்டத்திற்காக செயல்பட செய்தது. இதன் மூலம் கிராமங்களில் சிகிச்சையின்றி அல்லாடி
வந்த பலர் கண்டறியப்பட்டு முறையான சிகிச்சியின் மூலம் குணப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
தற்சமயம் 12 தன்னார்வ தொண்டர்கள் இதில் இயங்கி வருகின்றார்கள்.
4. இள வயது
பெண்கள் மற்றும்
கற்பினிகளிடையே இரத்த சோகை நோயை கட்டுப்படுத்துதல் :
தமிழ்நாடு தன்னார்வ தொண்டு நிறுவனம் - சென்னை உடன் பி.வி.எம் அறக்கட்டளை இணைந்து
இள வயது பென்கள் மற்றும் கற்பிணிகளிடையே உள்ள இரத்த சோகை நோய் குறித்து ஆய்வு
நடத்தி நோய் குறித்த மதிப்பீடு ஒன்றை நடத்தியது. ஆய்வு முடிவில்
ஆய்வுக்குட்படுத்தப்பட்ட இளம் பெண்கள் மற்றும் கற்பிணி பென்களில் 50 சதவிகிதம் பேர்
இரத்தச் சோகை நோயினால் பாதிக்கப்பட்டிருந்து கண்டறியப்பட்டு அவர்களுக்கு இந்நோயை
போக்குவதற்குன்டன
இரும்புச் சத்து உள்ள உணவுப்பொருட்களை பற்றியும், காய்கறிகளை
உணவில் சேர்த்துக் கொள்வது பற்றியும் அறிவுருத்தப்பட்டது.
5. மழை நீர்ச்சாகுபடி :
மழை நீர்ச்சாகுபடி பற்றிய விழிப்புணர்வு முகாம் கடந்த 19.04.2008 அன்று
இராமநாதபுராத்தில் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகராட்சி சேர்மேன் மற்றும்
ஏராளமான மக்கள் கலந்து கொண்டார்கள்.
6. மனித உரிமை தினம் :
சர்வதேச மனித உரிமை தினம் இராமநாதபுரத்தில் பி.வி.எம் அறக்கட்டளையால்
கொண்டாடப்பட்டது.
7. சர்வதேச குடிநீர் தினம்:
பி.வி.எம் அறக்கட்டளையால் கிராமப்புரங்களில் சர்வதேச குடிநீர் தினம்
கொண்டாடப்பட்டது. மாவட்ட தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய அதிகாரிகளும்,
மாவட்ட சுற்றுப்புரச்சூழல் அலுவலக் அதிகாரிகளும், நகராட்சி சேர்மேன்,
மற்றும் அதிக அளவு அதிகாரிகளும், பொதுமக்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.