சேவைகள்

நமது மாவட்ட மாணவர்கள் மற்றும் வேலையில்லா இளைஞர்கள் மத்தியில் அவர்களது திறமையை வளர்க்கும் முயற்சியில் பி.வி.எம் அறக்கட்டளையானது "சுய உதவி" என்ற ஒரு திட்டத்தினை அறிமுகப்படுத்தி முன்னெடுத்து செல்கிறது.

ஒவ்வொரு மாதமும் வேலையில்லாதவர்கள் கலந்து கொண்டு தங்கள் அனுபவத்தினை பகிர்ந்து கொள்ளும் வகையில் நடத்தப்பட்டு வருகின்றது. இவர்களுடைய சம்பாதிக்கும் திறனை வளர்த்துக்கொள்ள இது ஒரு மையமாக செயல்படுகின்றது. இது வரை இந்த நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு நன்மைகள் உரிய மக்களுக்கு கிடைத்துள்ளன.

பி.வி.எம். அறக்கட்டளையின் மூலம் ஏழைகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பி.வி.எம் அறக்கட்டளையின் மூலம் ஏழை தொழிலாளர்களுக்கு டிரை சைக்கிள்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

ஆர்வமுள்ள, திறனுள்ள நபர்களுக்கு அவர்களது வாழ்க்கை தறத்தை உயர்த்துவதற்காக வேண்டி தையல் இயந்திரங்கள், டிரை சைக்கிள்கள், அயன் பாக்சுகள், தேனீர் கடைகள் என பல்வேறு வகையான உதவிகளை எமது அறக்கட்டளை அமைதியான முறையில் செய்து வருகின்றது. இதுவரை 7000 த்திற்கும் அதிகமான மக்கள் இதனால் பயனடைந்துள்ளார்கள்.

 
Powered by : www.pvmtrust.in