Home

PLEASE CLICK HERE TO WATCH NEW VIDEOS

மக்கள் வெற்றி இயக்கம் (People’s Victorious movement (PVM Trust) என்பது 1999 ல் இருந்து கடலோர மாவட்டமான இராமநாதபுரம் மாவட்ட ஏழை மக்கள், பினதங்கிய மக்கள், ஆகியோருக்கு சேவை செய்து வரும் ஒரு அரசு சாரா தொண்டு நிறுவனமாகும். இந்நிறுவனம் கடந்த 2006 ம் கடந்த 2006 ம் ஆன்டு முறைப்படி அரசிடம் பதிவு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றது.

பி.வி.எம் அறக்கட்டளையின் குறிக்கோளானது :
இந்த சமுயதாய மக்களுக்கு மத்தியில் சமூக நல்லிணக்கத்தை ஏற்ப்படுத்தி, தேசிய ஒருமைப்பாட்டை நிறுவுவது, அதன் மூலம் இம்மக்களுக்கு சமூக நீதி கிடைக்கச் செய்வது.


தேசிய ஒற்றுமையின்மையும், சமூக நல்லினக்கமின்மையும் ஏழ்மையாலும், பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்பதாலும்தான் ஏற்படுகின்றன. எம்முடைய அடிப்படை இலட்சியமானது, பின்தங்கிய, ஏழைகளுக்கு அதிகாரப்பகிர்வின் மூலம் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்துவது. பொருளாதார ரீதியாக பின்தங்கியிருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக தொடர்ச்சியாக பாடுபடுதல்..

எமது இயக்கத்தின் கொள்கை என்னவென்றால் …
‘மக்களுக்கு உதவுவதன் மூலம் அம்மக்கள் தமது தேவைகளை தாமே பூர்த்தி செய்து கொள்பவர்களாக ஆக்குதல்’      

 


இநத ஒரு இக்கட்டான உலகில் வாழ்வதற்கு தேவை ஏதாவது ஒரு தொழில் அந்த தொழிலை கற்றுக் கொன்டால் இவ்வுலகில் சுயமாக உழைத்து வாழலாம் என்ற சூழலில் ஏராளமான ஏழை, விதவை பென்கள் உள்ளார்கள். இப்பெண்களின துயரை துடைக்கும் வகையில் இந்த பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை அவர்களே நிர்ணயித்து கொள்ளும் வகையில் பி.வி.எம் அறக்கட்டளையானது தையல் பயிற்சியினை வழங்கி வருகின்றது.

ஏழை மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில மொழி கற்பதென்பது ஒரு எட்டாக்கணியாகவே இருந்து வருகின்றது. அவர்களின் துயரை போக்கும் வகையில் பி.வி.எம் அறக்கட்டளை ஏழை, எளிய மாணவ மாணவிகளுக்கு இலவசமாக ஆங்கில மொழி பயிற்சியை உரிய தகுதியான திறமையான ஆசிரியர்களை கொண்டு நடத்தி வருகின்றது.



Our Services
Powered by : www.pvmtrust.in